Monday 29 April 2013


ஆட்சென்ஸ் கணக்கு வாங்குவதற்கு புதிய செயல்முறைகள்



இணைய விளம்பரங்களின் மூலம் சம்பாதிக்க கூகிளின் ஆட்சென்ஸ் (Google Adsense) தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆட்சென்ஸ் கணக்கு வாங்க அப்ளை செய்தால் வேகமாகவும் எளிமையாகவும் நடைமுறைப் படுத்திவிடும். அதற்கு அவர்களின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நமது இணையதளம்/வலைப்பூ சரிவர இருக்க வேண்டும். பிறகு ஆட்சென்ஸ் கிடைத்தவுடன் உடனடியாக நமது தளத்தில் விளம்பரங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இனி இந்த நடைமுறைகள் இன்றி மேலும் கடுமையான விதிகளைக் கொண்டு வந்துள்ளது. 

நமக்கு புதிய கணக்கொன்றை கொடுக்கலாமா வேண்டாமா என்பதை நமது வலைத்தளத்தை வைத்து பரிசோதிப்பார்கள். இதனை Approval process என்பார்கள். இப்போது இதில் 2-Step Verification process என்ற இரண்டு கட்ட சோதனை முறையைக் கொண்டு வந்துள்ளார்கள்.

1. முதலில் வழக்கம் போல அட்சென்ஸ்க்கு Signup செய்து நமது வலைத்தளம் பற்றிய விவரங்களைக் கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் முதல்கட்ட சோதனை செய்து சரியாக இருப்பின் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைய முதல் அனுமதி கிடைக்கும்.

2. அடுத்து விளம்பரங்களை நாம் விண்ணப்பத்தில் கொடுத்த இணையதளத்தில் வைக்க வேண்டும். இதனை இரண்டாவது கட்டமாகப் பரிசோதனை செய்வார்கள். இதிலும் சரியாக வந்தால் மட்டுமே இறுதி அனுமதி கிடைக்கும். (final approval)


நீங்கள் முதல் கட்டத்தில் எளிதாக பாஸ் செய்து விட்டாலும் இரண்டாவது சோதனைக்காக காத்திருக்க வேண்டும். அதுவரையிலும் உங்கள் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைந்தாலும் Your account is under review என்பதே காட்டப்படும் என்பது முக்கியமான விசயம். அதைப் போல இரண்டாவது சோதனை நடைபெறும் வரை விளம்பரங்களின் மேல் கிளிக்கப்படும் கிளிக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது. இரண்டாவது சோதனை வெற்றிகரமாக முடிந்தால் உங்கள் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பப் படும். அதன் பின்னரே உங்கள் கணக்கைப் பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் Domain Ownership உறுதிப்படுத்தப் படுகிறது. இதனால் தளத்தை வைத்திருப்போர்கள்(owners) மட்டுமே புதிய கணக்கைப் பெற முடியும். போலியாகவும் பணத்துக்காகவும் புதிய ஆட்சென்ஸ் கணக்கைத் துவங்குபவர்களுக்கு இனி சிக்கல் தான். இதைப் போல Indyarocks, hubpages தளங்களில் உறுப்பினராகி வேகமாக ஆட்சென்ஸ் பெறுபவர்களும் பாதிக்கப் படுவார்கள். இந்த நடைமுறைகள் இனி ஆட்சென்ஸ் பெறுவதைத் தாமதப் படுத்தலாம். ஆட்சென்ஸ் கிடைக்காதவர்கள் வேறு எதேனும் மாற்று விளம்பர சேவைகளைப் பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment